×

பத்துப்புவிடுதி கிராமத்தை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு: கலெக்டர் உத்தரவு

தஞ்சாவூர், மே 13: தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டம் பத்துப்புலிவிடுதி கிராமம் நடுத்தெருவில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் மகன் செல்வேஷ்(30) என்பவர் தொடர் குற்றச்செயலில் ஈடுபடுபவர் என்று போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, திருவோணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார்(பொறுப்பு) இதற்காக தாக்கல் செய்த ஆணையுறுதிக்கான ஆவணங்களின் அடிப்படையில், தஞ்சை மாவட்ட எஸ்பி சுந்தர வதனம்,

தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் செல்வேஷை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செல்வேஷை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் வைத்திட உத்தரவிட்டார்.

 

Tags : Asylum Village ,Thanjavur ,Selvaraj ,Selvesh ,Madidera ,Thiruvonam Vatom Bhattupulividu ,Tanji district ,Thiruvonam Police Station ,Inspector ,Sivakumar ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...