2 வீடுகளை உடைத்து 32 சவரன் கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமம் தபஸ்யா பார்க் மயிலை நகரை சேர்ந்தவர் மாதவன். கடந்த 26ம்  தேதி மாதவன், தனது சொந்த ஊரான கும்பகோணம் சென்றார். அவரது மனைவி, சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாதவன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில்  வைத்திருந்த 30 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ₹42,500 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

அதேபோல், அருகில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் உள்ள பாவேந்தர் என்பவர் வெளியூர் சென்றுள்ளார். அவரது வீட்டையும் உடைத்து, இரண்டரை  சவரன் நகை, 8 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து  மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>