- திருத்துறைப்பூண்டி
- திருச்சி
- திருவாரூர்
- திருவாரூர் மாவட்ட ரயில் பயனீட்டாளர்கள் சங்கம் மாவட்டம்
- ஜனாதிபதி
- வழக்கறிஞர் நாகராஜன்
- மாவட்ட செயலாளர்
- எயயூர் மணிமரன்
- திருத்துறைப்பூண்டி சந்திப்பு
- திருச்சிராப்பள்ளி
திருத்துறைப்பூண்டி, மே 12: திருத்துறைப்பூண்டி சந்திப்பு நிலையத்திலிருந்து திருவாரூர் வழியாக திருச்சிராப்பள்ளிக்கு தினசரி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் சென்னை தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு நிலையம் ஆனது நூற்றாண்டுகள் பெருமை வாய்ந்த ரயில் நிலையம் ஆகும். திருத்துறைப்பூண்டியை சுற்றி கோட்டூர், எடையூர் பாண்டி, கள்ளிக்குடி நெடும்பலம், கட்டிமேடு, பாமணி, கொருக்கை கொக்கலாடி, மணலி, ஆலத்தம்பாடி, கச்சனம் போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்தும் திருக்குவளை, தலைஞாயிறு, வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரன் இருப்பு, புஷ்பவனம், வேதாரணியம்,கோடியக்கரை போன்ற பகுதிகளில் பல்வேறு பணப்பயிர்கள் விளைவிக்கப்பட்டு அதிக அளவிலான விளைச்சல் பெறப்படுகிறது.உப்பு உற்பத்தி, அயோடின் உற்பத்தி, மீன்,கருவாடு, காய்கறிகள், மல்லிகைப்பூ, மாம்பழங்கள் தேங்காய் உற்பத்தி மற்றும் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்து, பச்சைப்பயிறு போன்ற தானிய வகைகளும் அதிக அளவில் விளைகின்றது. இவற்றையெல்லாம் சந்தைப்படுத்துவதற்கும் மற்ற பொருட்களை திருச்சியில் இருந்து இந்த பகுதிகளுக்கு வாங்கி வந்து வியாபாரம் செய்வதற்கும் திருச்சியை நம்பி உள்ளனர்.
பெரிய நகரமாக விளங்குகின்ற திருச்சியில் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகள் தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டத் தலைநகரங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிலையங்களுக்கும் தினந்தோறும் அதிக அளவிலான பயணிகள் பேருந்துகளை தம்பி பயணம் செல்ல வேண்டி உள்ளது. ரயில்வே துறைக்கு அதிக அளவிலான வருமானம் தரக்கூடிய ரயில் வழித்தடமாக விளங்குகின்ற திருத்துறைப்பூண்டி சந்திப்பு நிலையத்திலிருந்து திருவாரூர் வழியாக திருச்சிராப்பள்ளிக்கு இரு மார்க்கத்திலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ரயிலை இயக்கிட வேண்டும்இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
