×

டெல்லி கலவரத்துக்கு மத்திய ஆட்சியாளர்களே காரணம்

புதுச்சேரி, மார்ச் 1:  புதுச்சேரி சட்டமன்ற கமிட்டி அறையில் முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் 4 மாதங்களுக்கான  வளர்ச்சி விகிதம் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சதவிதமாக இருந்து வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, வேலைவாய்ப்பின்மை, தொழிற்சாலை மூடுதல், அந்நிய நாட்டு மூலதனம் தடுத்து நிறுத்தப்பட்டது, நாட்டில் நடைபெறும் கலவரங்கள் உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் ஆகும்.

 மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் 20 சதவீதம் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளது. கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. மக்களுக்கு கொடுத்த திட்டம் ஒன்றையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில் மக்களை திசை திருப்ப மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் கலவரம் நடந்து வருகிறது. டெல்லியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தாய்மார்கள் தாக்கப்பட்டது மிக கொடுமையான செயல் ஆகும். கிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் விளைவு 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். டெல்லி ரத்த களறி ஆகிவிட்டது. தாய்மார்கள் கணவனை இழந்து படும் இன்னல்களை பார்க்கும்போது, இந்தியா ஜனநாயக நாடா? என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.

 பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, கத்திகளையும், இரும்பு தடிகளையும் கொண்டுவந்து மிருகத்தனமாக தாக்கியிருப்பது பெரிய வன்கொடுமை செயலாகும். ஆனால், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு கலவரத்தை ஒடுக்க உத்தரவு வரவில்லை என்று காவல்துறை கூறுகிறது. இதன் மூலம் மத்திய ஆட்சியாளர்களே அமைதியான போராட்டத்தை நிலை குலைக்க செய்திருப்பது தெரிகிறது. டெல்லியில் இப்படி கலவரம் ஏற்பட்டிருப்பது மிக பெரிய அச்சத்தை தருகிறது. இதற்கு பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ேசானியா காந்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Delhi ,riots ,
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு