×

எம்ஐடி கல்லூரியில் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா

புதுச்சேரி, மார்ச் 1: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) கல்லூரியில், ட்ரெயின்லேப் அகாடமியுடன் இணைந்து அமைக்க பெற்ற   சர்வதேச சான்றிதழ் படிப்புகளுக்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி குழும  தலைவர் மற்றும் மேலாண்  இயக்குனர் தனசேகரன், எத்னோடெக் குழும தலைவர் கிரண் ராஜன்னா ஆகியோர் தலைமை தாங்கினர். துணை தலைவர் சுகுமாறன் எம்எல்ஏ, செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தலைவர் தனசேகரன் வரவேற்றார். விழாவில் ஆதிச்சூசனகரி மகாசமஸ்தான மட தலைமை பீடாதிபதி ஜகத்குரு நிர்மலா நந்தநாத சுவாமிஜி, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்காடி, பிஜிஎஸ் மற்றும் எஸ்ஜேபி கல்விக்குழுமம், மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் பிரகாஷ் நாத் சுவாமிஜி, ஐபிஎம் நிறுவன பொதுமேலாளர் கணேசன் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு, ட்ரெயின்லேப் அகாடமியின் சென்டர் ஆப் எக்ஸலன்சில் அமைக்கப்பட்டுள்ள  ஐபிஎம்-ஏஐ அகாடெமி, பெஸ்டோ தொழில்துறை ஆட்டோமேஷன் ஆய்வகம் மற்றும் சிஸ்கோ நெட் ஒர்க்கிங் அகாடமியை திறந்து வைத்து விழா மலரை பெற்றுகொண்டனர்.

புதுவை பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங், ஜேஎஸ்எஸ் பல்கலைக்கழக  முன்னாள் துணைவேந்தர் சங்கமேஷ்வரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும்  எத்னோடெக்  நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறி கொண்டனர். தொடர்ந்து ஐபிஎம் நிறுவனத்துடனான  புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. விழாவில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் நன்றி கூறினார்.

Tags : Opening Ceremony ,Training ,MIT College ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா