- கடன் விழிப்புணர்வு
- டூப்ரக்டூர்
- விவசாய பயிற்சி மையம்
- சிவகங்கை மாவட்டம்
- வைரவன்பதி,
- பஞ்சாப் தேசிய வங்கி வேளாண்
திருப்புத்தூர், மே 12: திருப்புத்தூர் அருகே உழவர் பயிற்சி மையத்தில், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில், பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை கடன்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பயிற்சி மைய இயக்குனர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். இதில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதின் நோக்கத்தில் அனைத்து வேளாண்மை கடன் திட்டங்கள் பற்றியும், அரசு மானிய திட்டங்கள் பற்றியும், புதிய கடன் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி பிஎன்பி வட்ட அலுவலக துணைப் பொது மேலாளர் ராஜீவ்குமார் சின்ஹா, உதவி பொது மேலாளர் நவின்குமார், செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாபு, தென்னை உற்பத்தியாளர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேவுகப்பெருமாள் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மற்றும் சிறு தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் பணம் இல்லா பரிவர்த்தனை எவ்வாறு மேற்கொள்வது என்றும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார். இந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் கலந்துகொண்டனர்.
