காலை 10 முதல் மதியம் 2 மணி வரை முதலிரவில் கணவனை தொடவிடாமல் தவிக்க விட்டு ஓட்டம் வீரப்பூர் திருவிழாவில் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க கூடாது கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி, மார்ச் 1: மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பெரிய காண்டியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. இந்த திருவிழா வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி முக்கிய திருவிழா நாளை முதல் 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நுழைவு வரி மற்றும் வாகனம் நிறுத்துவதற்கான வரி போன்ற எந்தவிதமான கட்டணமும் ஊராட்சியின் சார்பாகவும், தனிநபருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிமம் வழங்கவில்லை. இதனால் திருவிழாவையொட்டி வாகனங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் வரி வசூல் செய்யக்கூடாது. மீறி வரி வசூலித்தால் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>