×

பஸ்சில் பச்சைக்கிளிகளுடன் பயணம் 2 வாலிபர்களுக்கு ரூ.30,000 அபராதம்

திருச்சி, மார்ச் 1: திருச்சி ஜிகார்னர் பகுதியில் நேற்று அதிகாலை மாவட்ட வன அலுவலர் சுஜாதா தலைமையில் வன சிப்பந்திகள் குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ்சில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பஸ் சீட் பின்புறத்தில் ஒரு அட்டை பெட்டியில் 10 பச்சைக்கிளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை கொண்டு சென்றது மதுரை ஆர்.வி.பட்டியை அடுத்த சந்திரபாளையத்தை சேர்ந்த ஜெயபாண்டி(31), மதுரை திருப்பரங்குன்றம் விவேகானந்தபுரம் அய்யனார் காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (46) என்பது தெரிந்தது. இதையடுத்து இருவருக்கும் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வன உயிரின குற்ற வழக்குப்பதிந்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி, மார்ச் 1: முதலிரவில் கணவனை தொடவிடாமல் தவிக்க விட்டு சத்திரம் பஸ் நிலையத்தில் மாயமான புதுப்பெண், திருப்பூரில் காதலனுடன் குடும்பம் நடத்தியபோது மீட்கப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராஜா (29). இவரது மனைவி மஞ்சுளா (23). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2 வாரத்துக்கு முன் திருமணமானது. அன்றிரவு ஆசை கனவுகளுடன் முதலிரவு அறைக்கு தங்கராஜா சென்றார். மஞ்சுளாவும் வந்தார். மனைவியை தங்கராஜா நெருங்கியதும் அவர் விலகி விலகி சென்றார். கூச்சப்படுகிறார் என கருதிய தங்கராஜா, மனைவியிடம் ஏன் என்று கேட்டார். அதற்கு சரியான பதில் கூறாத மஞ்சுளா, இன்றைக்கு வேண்டாம் என்றார்.

இதனால் தூக்கமின்றி தங்கராஜா இரவை கழித்தார். முதலிரவில் கோட்டை விட்டதை 2ம் இரவிலாவது சாதித்து விட வேண்டும் என கருதி சென்ற தங்கராஜாவுக்கு அந்த இரவும் டிட்டோவாகவே இருந்தது. இப்படியாக 2 வாரம் கழிந்தது. ஊருக்கு கணவன், மனைவியாக நடந்து கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் தம்பாத்யம் நடக்கவில்லை. இதுபற்றி கேட்டாலும் மஞ்சுளா காரணம் சொல்லவில்லை. கடந்த 23ம் தேதி தோழி ஒருவர் திருச்சிக்கு வருவதாகவும், அவரை அழைத்துவர வேண்டுமென கூறி கணவருடன் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு மஞ்சுளா வந்தார். சத்திரம் பஸ் நிலையத்தில் இறங்கியதும் அங்கு ஜெராக்ஸ் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற மஞ்சுளா திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மஞ்சுளாவின் பெற்றோருக்கு தங்கராஜா தகவல் தெரிவித்தார். மணமகளின் தந்தை அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மஞ்சுளாவை தேடினர். இதுகுறித்து தங்கராஜாவிடம் போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தியபோது, ‘‘மனைவியை இன்னும் தொடவே இல்லை. 14 நாட்கள் இருவரும் ஒரே அறையில் இருந்தும் என்னை தொடவிடாமல் முரண்டு பிடித்தாள். சரியாகி விடுவாள் என கருதினேன். ஆனால் அவள் காணாமல் போய்விட்டாள்’’ என கதறி அழுதார். அதைதொடர்ந்து மஞ்சுளாவின் பெற்றோரை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது திருமணத்துக்கு முன் மஞ்சுளா திருப்பூரில் வேலை செய்ததாக தெரிவித்தனர். இதனால் மஞ்சுளா ஏற்கனவே காதல் வலையில் சிக்கியிருப்பாள் என கருதிய போலீசார் அவரது செல்போன் எண்ணை வாங்கி அதில் யார், யார் பேசி உள்ளனர் என ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு நம்பரில் தினமும் மணிக்கணக்கில் மஞ்சுளா கடலை போட்டது தெரியவந்தது. அந்த நம்பருக்குரியவரும் திருப்பூரில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. எனவே திருப்பூரில் மஞ்சுளாவிடம் பேசிய நபரை பிடித்து விசாரித்தபோது, மஞ்சுளா திருப்பூரில் இருப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் அவரை போலீசார் மீட்டு வந்தனர். அப்போது நான் புதுக்கோட்டைகாரரை காதலிக்கிறேன் என மஞ்சுளா கூறினார். திருமணமானவரின் வாழ்க்கையை கெடுக்க போகிறாயா என போலீசாரும், உறவினர்களும் கண்டித்தனர். மேலும் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக நடக்கட்டும். புருஷனுடன் குடித்தனம் நடத்து என புத்திமதி கூறினர். இரு தரப்பு பெற்றோரும் புத்திமதி கூறி மஞ்சுளாவை தங்கராஜாவுடன் அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி