காதலனுடன் குடும்பம் நடத்திய புதுப்பெண் திருப்பூரில் மீட்பு அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் லோக் தந்திரிக் ஜனதா தள மாநில தலைவர் பேட்டி

திருச்சி, மார்ச் 1: திருச்சியில் லோக் தந்திரிக் ஜனதா தளம் மாநில தலைவர் ராஜகோபால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லி கலவரத்துக்கு பாஜ தான் காரணம். இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசு இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும். என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்தமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதச்சார்பற்ற 3வது அணி நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் அமைய வேண்டும். தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க வலுவான எதிர்கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சியும் வலிமை இழந்துவிட்டது. அதனால் பிரிந்து கிடக்கும் ஜனதா தளத்தை ஒன்றிணைக்கும் முயற்சியை முன்னாள் மத்திய அமைச்சர் சரத்யாதவ் மேற்கொண்டு வருகிறார். 3 மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும். அடுத்த லோக்சபா தேர்தலை ஜனதா தளம் ஒன்றிணைந்து சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: