காடுவெட்டி அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின கண்காட்சி

முத்துப்பேட்டை, மார்ச் 1: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. இதற்கு பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் இளம்பரிதி முன்னிலை வகித்தார். கண்காட்சியில் குடிநீர் சுத்திகரிப்பான், கதிர் அறுக்கும் மிஷின், நிலநடுக்கத்தை கண்டறியும் கருவி, சோலார் வாயிலாக இயங்கும் வாகனம், ஏடிஎம் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அறிவியல் பட்டதாரி ஆசிரியை உமாராணி கண்காட்சியை ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் முருகையன், பிரபாகரன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் துரைராசு வரவேற்றார். ஆசிரியை பொற்செல்வி நன்றி கூறினார்.

Related Stories:

More