×

15 இடங்களில் நடந்தது திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 9 போர்வெல்லுக்கு சீல்வைப்பு

திருவாரூர், மார்ச் 1: திருவாரூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி இயங்கிவந்த 9 குடிநீர் ஆலைகளின் போர்வெல்களை வருவாய்த்துறையினர் மூலம் சீல் வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடுவதற்கு நீதிமன்ற உத்தரவையடுத்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை நீரியியல் பிரிவு அலுவலர்கள் நேற்று மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி அனுமதி இல்லாமல் இயங்கி வரும் குடிநீர் ஆலைகளின் போர்வெல்களுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் திருவாரூர் தாலுக்காவிற்குட்பட்ட விஷ்ணுதோப்பு, சேந்தமங்கலம், மணக்கால் மற்றும் குடவாசல் தாலுக்காவிற்குட்பட்ட ஊர்குடி, தலையாலங்காடு, திருவிடைச்சேரி மற்றும் மன்னார்குடி தாலுகாவிற்குட்பட்ட உள்ளிக்கோட்டை, தலையாமங்கலம் மற்றும் நன்னிலம் பகுதியில் இயங்கி வந்த ஒரு குடிநீர் ஆலை என மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 தனியார் குடிநீர் ஆலைகளின் போர்வெல்களுக்கு நேற்று ஆர்டிஓக்கள் திருவாரூர் ஜெயப்பிரிதா, மன்னார்குடி புண்ணியகோட்டி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர். இருப்பினும் உரிய அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் இதுபோன்று குடிநீர் ஆலைகள் புற்றீசல் போல் இயங்கி வருவதால் அதனையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur district ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...