கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கும்பகோணம்,மார்ச் 1: கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் 36வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத், இளங்கலை பயின்ற 1106 மாணவிகளுக்கும் முதுகலை பயின்ற 288 மாணவிகள் என 1394 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்,தொடர்ச்சியான சிறிய முயற்சி பெரிய வெற்றியை தரும். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றவுடன் முதல் நன்றியை பெற்றோர்களுக்கு செலுத்த வேண்டும் என்றார். இதில் ஏராளமான மாணவிகள்,பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>