×

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 21 இடங்களில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தர்ணா

தஞ்சை, மார்ச்1: தஞ்சை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 21 இடங்களில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தஞ்சை மாநகர கிளை தலைவர் சையது முஸ்தபா தலைமை வகித்தார். மாநகர செயலாளர்கள் யாசர் அராபத், பிலால், துணை தலைவர்கள் ஹாலித் அகமது, அக்பர் அலி, பொருளாளர் உமர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு குடியுரிமைச் சட்டத்தையும், குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் டில்லி, சென்னையில் நடந்த வன்முறைகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இதேபோல் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவாமிமலை கிளைத் தலைவர் ஜாபர் தலைமை வகித்தார். இதேபோல் நடுக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகமது பந்தர் தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். மேலும் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டிணம், மதுக்கூர், திருவிடைமருதூர் உட்பட 21 இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோயிலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு நாச்சியார்கோயில் கிளை தலைவர் அமீர்தீன் தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பேச்சாளர் சன்னாபுரம் சலீம் மற்றும் நாச்சியார்கோயில் சேக் கண்டன உரையாற்றினர். இதே போல், கும்பகோணம், ஆடுதுறை, திருப்பனந்தாள் பகுதிகளில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திருவையாறு: திருவையாறு அடுத்த நடுக்கடையில் நடந்த போராட்டத்திற்கு முகமபந்தர் தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவர்சாகுல்ஹமீது தலைமை வகித்தார். கண்டியூரில் நடந்த போராட்டத்திற்கு. தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவர் ஷர்புதீன் தலைமைவகித்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேராவூரணி மற்றும் முடச்சிக்காடு கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற போராட்டத்திற்குகிளைத்தலைவர் பஷீர் அலி தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் பள்ளிவாசல் அருகில் டிஎன்டிஜே கிளைத் தலைவர் பாவா தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Tags : Tawheed Jamaat ,Tanjore ,
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...