நாகத்தி கிராமத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

திருவையாறு, மார்ச் 1: திருவையாறு அடுத்த நாகத்தி கிராமத்தி சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் இளங்கோ தலைமை வகித்தார். குடிமைப்பொருள் வழங்கல் துணை தாசில்தார் செல்வராணி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதையடுத்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்பட 10 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்பட்டது. வருவாய் ஆய்வர் இந்துமதி வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் ராதிகா நன்றி கூறினார்.

Related Stories:

>