அம்மா மருத்துவ முகாம்

அறந்தாங்கி, மார்ச்1: அறந்தாங்கியை அடுத்த நெய்வத்தளியில் அம்மா மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுபலட்சுமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவர்கள் அபிமதி, மணிகண்டன் மற்றும் மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் 151 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அமுதா ராணி கணேசன், ஒன்றியக் கவுன்சிலர் சகுந்தலா, மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் வைரவன், பழனியப்பன், கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>