விஷக்கடிகளுக்கு சிகிச்சை அளிக்க தஞ்சாவூரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஒப்புயர்வு மையம் தொடங்கப்படும்

புதுக்கோட்டை, மார்ச் 1: புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தின் எதிரே சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் சுப்பிர மணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ெதாடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: விஷ கடிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஒப்பு உயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. இதேபோல சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கல்லீரல் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒப்புயர்வு தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் எலி பேஸ்ட்டால் பலர் பாதிக்கப்படும் நிலையில் அதனை தடை செய்வது குறித்து மற்ற துறையுடன் கலந்து பேசி எலி பேஸ்ட்டை தடை செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை, தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளை தரக்குறைவாக பேசினால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories:

>