×

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பெரம்பலூர், அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் தர்ணா

பெரம்பலூர், மார்ச் 1: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையின் சார்பில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளை தலைவர் ஷபியுல்லாஹ் தலைமை வகித்தார். மாவட்டதலைவர் அப்துல் நாஸர், கிளை செயலாளர் ஷாகுல் ஹமீது, து.தலைவர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட மாநில செயலாளர் பைசல் பேசினார். இதேபோல் பெரம்பலூர் நகர கிளை சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர்ராஜா முஹம்மது தலைமை வகித்தார்.

கிளை தலைவர் ஜாஹிர் ஹுசைன்முன்னிலை வகித்தார். மாவட்ட பேச்சாளர் யாசீர் முகம்மது சிறப்புரை ஆற்றினார். புது ஆத்தூரில் நடைபெற்ற தர்ணாபோராட்டத்திற்குமாவட்ட துணை செயலாளர்அப்துல் ஹக்கீம்தலைமை வகித்தார். கிளை செயலாளர்அஷ்ரப் அலிமுன்னிலை வகித்தார். போராட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைபோராட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
அரியலூர்: அரியலூர் பேருந்துநிலையம் அருகே குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற கோரியும், டெல்லியில் நடைபெற்ற அராஜக கலவரத்தை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் கண்டன தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குழைந்தைகள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் அறவழிபோராட்டத்தில் இருந்து பின்வாங்கும் நிலைக்கே இடமில்லை எனவும் இந்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதித்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆளுகின்ற எடப்பாடி அரசிற்கு பதில் கூறுவோம் என அமைப்பின் பெண்கள் ஆவேச குரல் கொடுத்தனர்.

Tags : Tawheed Jamaat Tarna ,Perambalur ,Ariyalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...