செந்துறை அருகே காம்பவுண்ட் சுவர் ஏறிகுதித்து பெண்ணிடம் செயின் பறிப்பு மர்மநபருக்கு வலை

அரியலூர்,மார்ச்1: செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் பெண்ணிடம் ஆறரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். சீனிவாசன் அருகில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் நேற்று இரவு நேர பணிக்கு சென்றுள்ளார், அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் ஏறி குதித்து உள்ளே வந்திருக்கிறார். அப்பொழுது ஏற்பட்ட சத்தம் கேட்டு சீனிவாசன் மனைவி ஷீலா(29) வெளியே வந்த பார்த்த போது டவுசர், டிசர்ட் அணிந்த மர்ம நபர் திடீரென ஷீலா கழுத்தில் இருந்த சுமார் 6.1/2 பவுன் தாலி செயினை அறுத்துள்ளார், ஷீலா கூச்சல் போட்டதில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வருவதற்குள் காம்பவுண்ட் சுவர் ஏறி அருகில் உள்ள காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டார். இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் சீனிவாசன் அளித்த புகாரை தொடர்ந்து ச இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More