×

முதிய தம்பதி படுகொலை வழக்கு 3 இந்திய வம்சாவளிகள் குற்றவாளிகள்: கனடா நீதிமன்றம் தீர்ப்பு

 

அபோட்ஸ்போர்ட்: கனடாவில் பணத்துக்காக முதிய தம்பதியை கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 வாலிபர்கள் குற்றவாளிகள் என அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அபோட்ஸ்போர்ட் பகுதியை சேர்ந்த முதியவர் அர்னால்டு மற்றும் அவரது மனைவி ஜோன் டீ ஜோங் ஆகியோர் வீட்டில் தனிமையில் வசித்து வந்தனர்.கடந்த 2022 மே மாதம் முதிய தம்பதியினர் தங்களுடைய வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியினரான வாலிபர்களான குர்கரண்சிங், அபிஜித் சிங் மற்றும் குஷ்வீர் தூர் ஆகியோர் 2024ல் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை நடந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு முதிய தம்பதி கொலை வழக்கை விசாரித்த பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதி பிரண்டா பிரவுண் 3 பேரும் குற்றவாளிகள் என்று நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தார்.

முதிய தம்பதியின் வீட்டிற்கு சுத்தம் செய்யும் பணிக்காக வந்திருந்த வாலிபர்கள் 3 பேரும் பணத்தாசையினால் கொலை செய்ததாக அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கொலையாளிகளின் வீட்டில் இருந்து முதியவரின் கிரெடிட் கார்டுகள், காசோலைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மூவருக்குமான தண்டனை விவரம் 28ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Tags : Abbotsford ,Arnold ,British Columbia, ,Canada ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்...