தேர்தல் பாதுகாப்பு பணிக்கு எல்லை பாதுகாப்பு படை வருகை

விருதுநகர், மார்ச் 1: விருதுநகரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு எல்லை பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் போன்றவை நடைபெற்றுவரும் நிலையில் தேர்தல் விதிமீறல்கள், பணம் பட்டுவாடா  போன்றவற்றை தடுத்து நிறுத்த தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நாகலாந்து மாநிலத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படை போலீசார் வந்துள்ளனர். இவர்கள் கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>