வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக தேர்தல் பிரசார சைக்கிள் ஊர்வலம் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

திருச்செந்தூர், மார்ச் 1: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணத்தில் ‘ஸ்டாலின் தான் வாராரு.. நல்லாட்சி தரப் போறாரு’ என்ற பிரசார பாடல் வெளியீடு மற்றும் தேர்தல் பிரசார சைக்கிள் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்து, ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். வீரபாண்டியன்பட்டணம் ரயில்வே கேட் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் மெயின்ரோடு வழியாக திருச்செந்தூர் வஉசி திடலில் நிறைவு பெற்றது. இதில் திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழிரமேஷ், நவீன்குமார், பாலசிங், நகர செயலாளர்கள் வாள்

சுடலை, முத்துமுகம்மது, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணை செயலாளர் காதர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தர்ரொட்ரிகோ, ஜெபராஜ், வேலம்மாள், ராஜபாண்டி, ராமஜெயம், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சுகு, இளங்கோ, ராஜமோகன், கிருபாகரன், சுதாகர், தங்கபாண்டியன், வீரபாண்யன்பட்டினம் கிளை செயலாளர் ஆனந்த்ரொட்ரிகோ, பஞ்சாயத்து துணை தலைவர் ஜெக தீஸ், முன்னள் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>