×

வாக்குப்பதிவு 80 % ஆக உயர்த்தப்படும் தேர்தல் அதிகாரி கண்ணன் பேட்டி

விருதுநகர், மார்ச் 1: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும்,  தேர்தல் அதிகாரியுமான கண்ணன் அமலில் உள்ள தேர்தல் நடத்தை  விதிமுறைகள் குறித்து கட்சியினருக்கு விளக்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், சிவகாசி சார் ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

இதன் பின் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது 1,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வருடம் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து கூடுதலாக 489 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவிகித வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். விதிமீறல்களை கண்காணிக்க மாவட்டத்தில் 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 21 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.  வாக்குப்பதிவு குறைவாக கண்டறியப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இந்தமுறை வாக்குப்பதிவை 80 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.

Tags : Kannan ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...