×

விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

சென்னை: தவெக தயாரித்தது போர்ஜரி கடிதம் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “த.வெ.க.வுக்கு அமமுக எம்.எல்.ஏ. ஆதரவு அளித்தால் ஒரிஜினல் கடிதத்தை வெளியிட வேண்டியது தானே?. அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை எடுத்தது யார்?. தவெக தயாரித்தது போர்ஜரி கடிதம். தன்னை மிரட்டியும் அச்சுறுத்தியும் பார்க்கிறது த.வெ.க. அமமுக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விஜயை சும்மா விட முடியாது. ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு முதலமைச்சராகவே ஊழல் செய்பவர் விஜய். அமமுக எம்.எல்.ஏ. கையெழுத்திடுவது போல தவெக வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது. விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு. கடித போர்ஜரி பின்னால் இருப்பவர் விஜய்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,DTV ,Dinakaran Bharappu ,Chennai ,Dhinakaran ,Daveka ,Fri. ,Amuka M. L. A. ,Amamuka M. L. A. ,Kamaraj ,Taweka ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...