×

உசிலம்பட்டி அருகேமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 

உசிலம்பட்டி, மே 9: உசிலம்பட்டி அருகே காற்றுடன் கூடிய கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் சாய்ந்து விழுந்ததில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் செட்டியபட்டி, பூச்சிபட்டி, நக்கலப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் பூச்சிபட்டியில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்து விழுந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 

Tags : Usilampatti ,Usilampatti Nagar, Madurai district… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...