×

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்

 

திருப்புத்தூர், மே 9: திருப்புத்தூரில் அமைந்துள்ள பூமாயி அம்மன் கோயிலில் மே 6ல் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் வசந்தப் பெருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி மூலவர் பூமாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வெள்ளி அங்கி அணிந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு பால், மஞ்சள், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு 8 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடி மரத்தில் தர்ப்பைப் புல், மாவிலை மற்றும் மஞ்சள் நிற பட்டுச்சேலை வைத்து கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்று காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பூமாயி அம்மனுக்கும், பட்டருக்கும் காப்பு கட்டப்பட்டது.

Tags : Spring Festival ,Poomayi Amman Temple ,Tiruputtur ,Vasantha Peruvizha ,Poomayi Amman… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...