18 வயதிற்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால் பறிமுதல் போடி டிஎஸ்பி எச்சரிக்கை

போடி, மார்ச் 1: போடி டிஎஸ்பி பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை: போடி காவல்துறை உட்கோட்ட கட்டுப்பாட்டில் போடி நகர், புறநகர், குரங்கணி, அனைத்து மகளிர் காவல்நிலையம், தேவாரம், கோம்பை, சின்னமனூர், ஹைவேவிஸ் உள்ளிட்ட காவல்நிலையங்கள் உள்ளன. இந்த காவல் சரகங்களில் உள்ள சிறுவர்கள் பயமின்றி டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால், விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன.

இதனை தடுக்கும் விதமாகவும், சிறுவர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டும், விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டி வந்தால், அவைகளை போலீசார் பறிமுதல் செய்வர். பின்னர் விசாரணை செய்து, வாகன உரிமையாளர்கள் யாராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போடி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளின் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு சிறுவர்கள் ஓட்டி வரும் வாகனங்களை பறிமுதல் செய்வர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>