நெல்லை மாவட்ட ஹாக்கி வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் வழங்கினார்

கேடிசிநகர், மார்ச் 1: நெல்லை மாவட்ட ஹாக்கி வீராங்கனைகளான பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் வழங்கினார். நெல்லை மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவிகள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் பல்வேறு சாதனைகள் படைத்திட ஏதுவாக விளையாட்டு உபகரணங்கள் அரசு சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நெல்லை மாவட்ட ஹாக்கி வீராங்கனைகளாகத் திகழும் பாளை சாராள் டக்கர் மேல்நிலைப் பள்ளி, புனித இஞ்ஞாசியார் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு கிரேஸ் ஹாக்கி அகாடமி சார்பில் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹாக்கி வீராங்கனைகளான பள்ளி மாணவிகளுக்கு கிரேஸ் ஹாக்கி அகாடமி முன்னாள் எம்.பி.யும், அதிமுக மகளிர் அணி மாநில செயலாளருமான விஜிலா சத்யானந்த், விளையாட்டு உபகரணங்கள் வழங்கிப் பாராட்டினார். அப்போது பாளை அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சிக்கன நாணய சங்கத்தலைவர் சத்யானந்த் சீனிவாசகம், பயிற்றுநர் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>