×

தேர்தல் பிரசாரத்தில் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி கலை சங்க கூட்டமைப்பு கோரிக்கை

நெல்லை, மார்ச் 1: சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என தென்மண்டல அனைத்து சங்கங்களின் கலை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தென்மண்டல அனைத்து சங்கங்களின் கலை கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. வண்ணார்பேட்டையில் நடந்த இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக் குழு உறுப்பினருமான பொன்பாண்டி தலைமை வகித்தார்.  சங்கச் செயலாளர் தோட்டகுடி மாரியப்பன் முன்னிலை வகித்தார். காளிதாசன் இறைவணக்கம் பாடினார். வேலவன் சங்கீதா வரவேற்றார். துணைத்தலைவர் கலையரசன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.

 கூட்டமைப்பின் உறுப்பினர் வில்லிசைக் கலைஞர் கிருஷ்ணாபுரம் முத்துலட்சுமி, வள்ளியூர் ராசுகுட்டி, முத்துப் பெருமாள் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்த தமிழக அரசுக்கு கூட்டத்தில் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவியை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்த தடை விதிக்காமல் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பிரமாண்ட முறையில் சங்க மாநாட்டை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Federation of Arts Associations ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ