×

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அறிவிப்பு

 

சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை என்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய 2 தொகுதிகளில் முறையே ஏ.எம்.ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெக சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடம் நேற்று முன்தினம் ஆதரவு கோரியிருந்தது.

ஆனால் அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் அந்த கோரிக்கையை நிராகரித்தார். இந்நிலையில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில், 3வது முறையாக நேற்று தவெக நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளை சந்தித்து பேசிய நிலையில் தவெகவுக்கு ஆதரவு இல்லை. திமுக கூட்டணியில் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்கிறது, என்று காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Dhaka ,Muslim League ,Indian Union ,Chennai ,Indian Union Muslim League ,Takeka ,Tamil Nadu ,Dimuka ,Babanasam ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...