×

களியல் வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரிந்த யானைகள் 3 நாட்கள் நடந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

நாகர்கோவில், மார்ச். 1: குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம்,  வேளிமலை, குலசேகரம், களியல் வனப்பகுதிகளில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி  கடந்த 25ம் தேதி  தொடங்கியது. மாவட்ட வனஅதிகாரி அசோக்குமார் தலைமையில் ஒரு பீட்டிற்கு 4 பேர் என 26  பீட்களில் 104 தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கணக்ககடுப்பில்  ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பு பணி 3 நாட்கள் நடந்தது. கணக்கெடுப்பு பணியின் போது யானை, காட்டுமாடு, மலபார் அணில், கரடி, காட்டுப்பன்றி, மிளா, உடும்பு, செந்நாய், முள்ளம்பன்றி,  மரநாய், எறும்புத்தின்னி,  கருமந்தி, வரையாடு, கேளையாடு, காட்டு முயல், காட்டு கோழி ஆகியவை நேரில்  கண்டறியப்பட்டன. புலி, சிறுத்தைகள், விருது போன்ற மாமிச உண்ணிகளின்  எச்சங்கள் கண்டறிப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பின்போது களியல் வனப்பகுதியான குலசேகரத்தை ஒட்டியுள்ள மலை பகுதியில் குட்டியானைகளுடன் யானை கூட்டம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது கண்டறியப்பட்டது. களியல் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் எஸ்டேட்களில் அன்னாசிபழம் பயிரிடப்பட்டுள்ளது. இதுபோல் பலாபழங்களும் மரங்களில் அதிக அளவு காய்த்துள்ளன. இதன் வாசனையால் யானைகள் கவரப்பட்டு இந்த வனப்பகுதிக்கு வந்து இருக்கலாம். மேலும் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் களியல் வனப்பகுதியில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. அங்கு தண்ணீரை தேடியும் யானைகள் வந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தேரிவித்தனர். கணக்கெடுப்பு விபரங்கள் முழுமையாக  பகுப்பாய்வு செய்த பின்னரே விரிவான தகவல்கள் தெரியவரும்.

Tags : Kaliyal forest ,
× RELATED மின் கசிவு காரணமாக பெட், சோபா...