தேர்தல் பாதுகாப்பு பணிக்கு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் குமரி வருகை

நாகர்கோவில், மார்ச். 1: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது.இந்நிலையில்  தென் மாவட்டங்களுக்கு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்பு படை 9 கம்பெனியை சேர்ந்த 900ம் வீரர்கள் நேற்று மதுரைக்கு ரயில் மூலம் வந்தனர். பின்னர் அவர்கள் நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர். குமரி மாவட்டத்திற்கு ஒரு கம்பெனியை சேர்ந்த 90 வீரர்கள் உதவி கமாண்டர் நவீன் ஜக்சார் தலைமையில் நேற்று வந்தனர். அவர்கள் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று(1ம் தேதி) முதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் சோதனையில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>