ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

காரைக்குடி, மார்ச் 1: காரைக்குடி அருகே கோவிலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கல்லல் வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பரசுபிரபாகர், மாவட்ட துணைத்தலைவர் ராம்மோகன், வட்டார பொருளாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கல்லல் வட்டார தலைவராக லதா, செயலாளராக ராஜலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வட்டார உறுப்பினர்கள் சேர்ப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறின.

Related Stories:

>