×

சொகுசு கப்பலில் இருந்து தப்பிய 23 பேர் – ஹன்ட்டா வைரஸ் பரவும் அபாயம்!

நெதர்லாந்து: ஹன்ட்டா வைரஸ் (hantavirus) பரவிய சொகுசு கப்பலில் இருந்து தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் முன்பே பல்வேறு நாடுகளை சேர்ந்த 23 பயணிகள் இறங்கி சென்றது உலகளவில் பயத்தைக் ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டாவின் கடற்கரையில் இருந்து கடந்த ஏப்ரல் 1-ல் புறப்பட்ட நெதர்லாந்து நாட்டின் எம்.வி. ஹோண்டியஸ் (MV Hondius) சுற்றுலா கப்பல் உலகின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருந்தது.

அந்த கப்பலில் 150 பயணிகள் இருந்தனர். தென் ஆப்ரிக்கா கடற்கரை நோக்கி சென்றபோது நெதர்லாந்து தம்பதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடும் காய்ச்சல் மற்றும் வாந்தியால் ஒருவர் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஒருவார காலத்தில் கப்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பயணிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சோதனையில் அவர்களுக்கு ஹன்ட்டா வைரஸில் ஒரு உருமாறிய ஆண்டிஸ் வைரஸ் (Andes virus – ANDV) தொற்று ஏற்பட்டது என உறுதியானது.

இந்த ஹன்ட்டா வைரஸ் (hantavirus) எலி போன்ற உயிரினங்களில் காணப்படும் ஒருவகை வைரஸாகும். எலிகளின் சிறுநீர், கழிவுகள் அல்லது உமிழ்நீரின் உள்ள சிறிய துகள்கள் காற்றில் கலக்கும்போது இந்த வைரஸ் பரவுகிறது. வைரஸ் கலந்த காற்றை சுவாசிக்கும்போதோ எலி போன்ற உயிரனங்களை தொடுவதாலோ, கடித்தாலோ ஹன்ட்டா வைரஸ் பரவிவிடும்.

இந்த வைரஸ் மனிதர்களின் நுரையீரலையும் மற்றும் சிறுநீரகங்களையும் பாதிக்கின்றன. நெதர்லாந்து சொகுசு கப்பலில் இருந்த பயணிகளுக்கு தொற்று பரவியுள்ளதா என்று உறுதி செய்யப்படும் முன்பே இறங்கி சென்ற அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 23 பயணிகள் மூலம் உலகளவில் தொற்று பரவிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Tags : Netherlands ,Argentina ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...