இன்று முதல் பறக்கும்படை குழுக்கள் வாகன சோதனை

மதுரை, மார்ச் 1: சட்டமன்றத்தேர்தல் தேதி கடந்த மாதம் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் தலா 3 பறக்கும்படை குழு, நிலை கண்காணிப்பு குழுக்களும், வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 9 குழுக்கள் மூன்று பிரிவாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு ஒரு குழு என மூன்று பிரிவாக பணியாற்ற உள்ளனர். 10 தொகுதிகளில் மொத்தம் 90 குழுக்கள் வாகன சோதனை, தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்தவுடன் பறக்கும்படை குழுக்கள் உடனடியாக வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். தற்போது தேர்தல் தேதி அறிவித்து, 3 நாட்கள் ஆகியும், நேற்று வரை பறக்கும்படை குழுக்கள் யாரும் வாகன சோதனை, கண்காணிப்பு பணியில்  ஈடுபடவில்லை.  இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று முதல் அந்தந்த குழுக்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்’ என்றார்.

Related Stories:

>