தேர்தல் பணியில் ஈடுபட மத்திய எல்லை பாதுகாப்பு படை வருகை

மதுரை, மார்ச் 1: மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், தேர்தல் பணிகளில் ஈடுபட மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று மதுரை வந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்குகிறது. 19ம் தேதி வேட்பு 3 மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை 20ம் தேதியும், வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி வரும் 22ம் தேதியாகும். இதனையடுத்து வாக்குப்பதிவு ஏப்.6ம் தேதி நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதற்காக 9 கம்பெனிகளை சேர்ந்த 1.130 மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் நாகலாந்தில் இருந்து ரயில் மூலம் நேற்று மதுரை வந்தனர். மதுரை ரயில் நிலையம் வந்த இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு படை வாகனங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கோள்ளப்பட்டுள்ளது. இந்த மத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்தந்த மாவட்ட மற்றும் நகர போலீசாரோடு இணைந்து தேர்தல் வாக்குப்பதிவு நாள் வரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர்.

Related Stories:

>