“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8ம் தேதி நாமக்கல் வருகை

நாமக்கல், மார்ச் 1: நாமக்கல்லில் 8ம் தேதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெறும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி, வரும் 8ம் தேதி நாமக்கல் மாவட்டம் வருகிறார். அன்று காலை 11 மணிக்கு நாமக்கல் -சேலம் நெடுஞ்சாலையில் பொம்மைகுட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, பந்தல் அமைக்கும் பணி  துவங்கியுள்ளது. இந்த பணியை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் துரை ராமசாமி, கவுதம், அசோக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>