ஆதி தொல்குடி பழங்குடியினர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்

ஊட்டி,மார்ச்1:தமிழ்நாடு ஆதி தொல்குடி பழங்குடியினர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள என்.சி.எம்.எஸ் மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பழங்குடியினர் கூட்டமைப்பு அமைப்பாளர் அழகியநம்பி தலைமை வகித்தார். ஆதிபழங்குடியினர் நல சங்க பொது செயலாளர் குமார், படுக தேச பார்டி தலைவர் மஞ்சை மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழக அரசின் பரிந்துரைைய ஏற்று மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

பழங்குடியினர் சான்றை வட்டாட்சியர்களே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டுக்கு முன்பு பெற்ற இன சான்றுகளை தமிழக அரசின் ஆணைப்படி ஏற்று கொண்டு அரசு பணியில் உள்ள பழங்குடியினருக்கு உரிய பணி பாதுகாப்பினை அளிக்க வேண்டும். பழங்குடிகளுக்கென தனி செயலாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>