திமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர், பிப்.26: திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வுபெற்ற எஸ்ஐ வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 32 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருவெறும்பூர் அருகே குண்டூர் அய்யம்பட்டி பெத்லகேம்நகரை சேர்ந்தவர் துளசிராம் (65). ஓய்வுபெற்ற எஸ்ஐயான இவர் திருச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணி (45). ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டுவாக பணியில் உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று தம்பதி இருவரும் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிகளுக்கும் சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து துளசிராம் வீட்டிற்கு வந்துபார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவை உடைத்து 32 பவுன் நகை கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>