×

சாணார்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா

கோபால்பட்டி, மே 6: சாணார்பட்டி அருகே வடகாட்டுபட்டியில் ஸ்ரீ காளியம்மன் மலையாள பகவதி அம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிள்ளையார் கோயிலில் இருந்து கரகம் ஜோடித்து வந்து காளியம்மன் கோயிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், கிடாய் வெட்டியும், முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

 

Tags : Kaliamman Temple Festival ,Chanarpatti ,Gopalpatti ,Sri Kaliamman Malayala Bhagavathy Amman Temple Festival ,Vadakattupatti ,Kaliamman temple ,Pillayar temple ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...