×

முத்துப்பேட்டையில் வணிகர் தினவிழா கொடியேற்றம்

முத்துப்பேட்டை,மே 6: முத்துப்பேட்டையில் வணிகர் தின விழாவையொட்டி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மே-5 வணிகர் தினத்தை முன்னிட்டு வர்த்தகக்கழகம் அமைப்பு சார்பில் வணிகர் தின விழா நடைபெற்றது. சங்க ஆலோசகர் ஆல்வின் அந்தோணி ராஜா, பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதற்கு தலைவர் நெய்னா முகமது தலைமை வகித்து அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

பின்னர் மே-5 வணிகர் தினத்தை பற்றியும் வியாபாரிகளின் சிரமங்கள் பற்றியும் ஆன்லைன் வியாபாரத்தால் சிறுகுறு வியாபாரிகள் வரை பாதிகப்படுள்ளனர். அதேபோல் நகை கடைகாரர்களுக்கு ஏற்படும் இன்னல் உள்ளிட்ட வியாபாரிகளுக்கு அன்றாடும் ஏற்படும் பிரச்னைகள் கடை உரிமம் எடுப்பது போன்ற பிரச்னைகளை அரசு சரி செய்ய முன்வர வேண்டும் என்று சுட்டிக்காட்டி பலரும் பெசினார்.

அதனை தொடர்ந்து வணிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் அமிர்தா தியாகராஜன், துணைச்செயலாளர்கள் அம்பேலா சாகுல் ஹமீது, குபேரன் பாலாஜி, செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், மீனா கணேசன், களஞ்சியம் நவாஸ்கான், வீனஸ் சேக், கலையரசன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் கிஷோர் நன்றி கூறினார்.

 

Tags : Merchants' Day ,Muthupettai ,Chamber of Commerce and Industry ,Muthupettai New Bus Stand ,Thiruvarur District ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...