கட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

திருத்துறைப்பூண்டி, பிப்.26: திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியை பிரியா உறுதிமொழி வாசித்து பேசினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மூலம் மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் பல்லூடகப் பயன்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிணி என்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் தனுஜா வரவேற்றார். ஆசிரியை வேம்பு நன்றி கூறினார்.

Related Stories:

>