நீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்

நீடாமங்கலம், பிப்.26: நீடாமங்கலம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆதார் அட்டையை புதிதாக விண்ணப்பிக்கவும், மேலும் ஆதாரில் திருத்தம் செய்யவும் சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தபால்நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அத்துறையின் தஞ்சாவூர் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுரையின் பேரில் மன்னார்குடி துணைக்கண்காணிப்பாளர் (தபால் துறை) பிரேம்ஆனந்த் மேற்பார்வையில் நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரி முருகன் மற்றும் அலுவலர்கள் கடந்த 22ம்தேதி முதல் முகாம் நடத்தி வருகின்றனர். முகாமில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்த முகாம் நாளை (27ம்தேதி) வரை நடைபெறும். முகாமினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு நீடாமங்கலம் தபால்துறை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

Related Stories:

>