×

எஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சை பிப்.26: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற் சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.15 கூலி வழங்க வேண்டும். லாரி மாமூல் ஊழல் முறையை ஒழிக்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். 2012 முதல் தற்காலிகமாக பணிபுரியும் கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26 வேலைநிறுத்தம் செய்ய அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களில் கொள்முதல் செய்த நெல்லும், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த நெல்லும் திடீரென பெய்த கன மழையால் பெரும் சேதமானது. விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு இயக்கம் செய்வதும் பாதிக்கப்படும். இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது பொருத்தமாக இருக்காது என்பதால் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக தலைமை அலுவலகம் நோக்கி போராட்டம் என்ற அடிப்படையில் மார்ச் 4ம் தேதி சென்னை நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags : SP Information Consumer Goods Corporation ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது