×

பயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், பிப்.26: மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராடுவார்கள் மீது உபா சட்டத்தின்கீழ் கைது செய்வதை கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பார்க் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக சைமன் வரவேற்றார். சுபாஷ் சக்திமோகன், பிரதீப், அஜித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம் பாரதி மற்றும் மண்டல செயலாளர் சிவராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன், ராவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மக்களுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் உள்ளிட்டவைகளை எதிர்த்து போராடுபவர்களை ஜனநாயக விரோத அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவாக மாநில அரசு அவர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாலன், சீனிவாசன், செல்வராஜ், சித்தானந்தம் ஆகியோர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ