×

திருத்துறைப்பூண்டி தொகுதியில் 13 வது முறையாக வெற்றியை ருசித்த இந்திய கம்யூனிஸ்ட்: ஒருமுறை கூட வெற்றி பெறாத அதிமுக

 

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இது திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கியது. காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாக இருக்கும் திருத்துறைப்பூண்டியில் விவசாயம், மீன் பிடித்தல் முக்கிய தொழிலாகும். திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாவே இருந்து வருகிறது. இதுவரை நடந்த ேதர்தல்களில் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் 12 முறை, திமுக 2 முறை, காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றிருந்தது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் மாரிமுத்து போட்டியிட்டார். அதிமுக சார்பில் பாலதண்டாயுதம், நாம் தமிழர் கட்சி வினோதினி, தவெக பாண்டியன் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர். இதில் மாரிமுத்து 74,062 வாக்குகள் பெற்று 12,922 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாலதண்டாயுதம் 43,073 வாக்குகளும், தவெக வேட்பாளர் 61,140 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோதினி 10,176 வாக்குகளும் பெற்றனர்.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 13வது முறையாக வெற்றி பெற்று தங்களது கோட்டை என்று நிரூபித்துள்ளது. தேர்தல் வரலாற்றில் அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதியாக திருத்துறைப்பூண்டி இருந்து வருகிறது.

Tags : RUTHARAPUNDI ,Thiruvarapundi ,Thiruvarur District ,Thiruthurapundi Assembly Constituency ,Driturapundi ,Muthuppet ,Kotur ,Kaviri Delta ,Thiruthurapundi Indian Communist ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...