×

சென்னைக்கு அடுத்தபடியாக புதுகையில் ரூ.13 கோடியில் மருத்துவர், செவிலியர் பயிற்சி மையம் கட்டும் பணி துவக்கம்

புதுக்கோட்டை, பிப். 26: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.13 கோடியில் புதிதாக அமைக்கவுள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாம்ப்கால் மருந்து செய் நிலையம் ஐஐ யூனிட் திறப்பு: புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் மருந்து செய் நிலையம் ஐஐ யூனிட் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். டாம்ப்கால் இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கணேஷ் முன்னிலை வகித்தார். யூனிட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். சென்னை டாம்ப்கால் பொது மேலாளர் அங்கையற்கன்னி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் மோகன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Doctor ,Nurse Training Center ,Chennai ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...