×

புதுச்சேரியில் சட்டசபைக்குள் முதன்முதலாக கால்பதிக்கும் 14 புதுமுகங்கள்: பெண் பிரதிநிதிகள் யாருமில்லை

 

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 14 பேர் முதன்முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகின்றனர். அதன்படி திமுகவில் கார்த்திகேயன் (நெல்லித்தோப்பு), செந்தில் என்ற ரமேஷ் (காலாப்பட்டு), விக்னேஷ் கண்ணன் (ராஜ்பவன்), என்ஆர் காங்கிரசில் ரவிக்குமார் (வில்லியனூர்), நாராயணசாமி (உழவர்கரை), ஐயப்பன் (அரியாங்குப்பம்), மோகன்தாஸ் (ஏம்பலம்), பாஜகவில் ஜிஎன்எஸ் ராஜசேகரன் (திருநள்ளாறு), மீனாட்சிசுந்தரம் (நிரவி திருப்பட்டினம்), லஜகவில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தவெகவில் ராமு (மணவெளி), சுயேச்சைகளாக அழகு என்ற அழகானந்தம் (கதிர்காமம்), விக்னேஸ்வரன் (நெடுங்காடு), அசோக்குமார் (மாகே) ஆகியோர் முதன்முறை எம்எல்ஏக்களாக பதவி ஏற்க உள்ளனர்.

இதேபோல் மங்கலம், தட்டாஞ்சாவடி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி இரண்டிலும் வெற்றிவாகை சூடியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிவெற்ற 10 பேர், இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டசபை செல்கின்றனர். முன்னாள் எம்எல்ஏக்களான லாஸ்பேட்டை – சிவக்கொழுந்து (என்ஆர் காங்.,), முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன் (என்ஆர் காங்.,), ஊசுடு – கார்த்திகேயன் (காங்.,), ஏனாம் – மல்லாடி கிருஷ்ணாராவ் (என்ஆர் காங்.,), உப்பளம் – அன்பழகன் (அதிமுக) ஆகிய 5 பேரும் மீண்டும் வெற்றிபெற்ற நிலையில் சட்டசபைக்குள் நுழைகின்றனர். புதுச்சேரிக்கான 16வது சட்டப்பேரவைக்கு ஒரு பெண் எம்எல்ஏ கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Puducherry ,Karthikeyan ,Nellittopu ,Sendil Ramesh ,Vignesh Kannan ,Rajbavan ,Ravikumar ,Willianoor ,NR Congress ,Narayanasamy ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...