×

தமிழ்நாட்டில் ஓ.பி.சி. மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்கள் ஏராளம்: மாணவர் கூட்டமைப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய ஓ.பி.சி. மாணவர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஓ.பி.சி. மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்கள் ஏராளம் என மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் உரிமைகளை பாதுகாத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். யுஜிசி கொண்டுவந்த சமூக சமத்துவ விதிமுறைகளுக்காக தேசிய அளவில் குரல் எழுப்பிய முதல் தலைவர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முதல்வர் ஸ்டாலின் ஊக்குவித்திருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Stalin ,Chennai ,Chief Minister ,K. All ,Indian ,
× RELATED சோழவரம் அருகே பார்வை மாற்றுத்திறனாளி...