திருச்செந்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருச்செந்தூர், பிப். 26:  திருச்செந்தூரில் தினசரி மார்க்கெட்டில் அதிமுக சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா திருச்செந்தூர் தினசரி மார்க்கெட்டில் அதிமுக ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், ஜெ.பேரவை செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியின் ஆரம்பகால தொண்டரான தொழிலாளிக்கு இலவச சைக்கிளை வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  

இதில் கானம் நகர செயலாளர் செந்தமிழ்சேகர், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், ஆறுமுகநேரி நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் நிவாஸ் கண்ணன், தொழிலதிபர் முத்துமணிகண்டன், தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>