சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.
அதே நேரம் திமுக 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், அதிமுக 55-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் அந்ததந்த தொகுதியினுடைய வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். தவிர தூத்துக்குடி, தாம்பரம், தஞ்சை, மதுரை தெற்கு,அரக்கோணம்,மாதவரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சரத் குமார் , தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய் சரவணன், மதுரை தெற்கு தவெக வேட்பாளர் எம்.எம்.கோபிசன்,மாதவரம் தவெக வேட்பாளர் விஜய்பிரபு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
– திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார்
– தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
– மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
– கே.வி.குப்பம் தவெக வேட்பாளர் தென்றல் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
– அரக்கோணம் தவெக வேட்பாளர் காந்திராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
– சிவகாசியில் தவெக வேட்பாளர் கீர்த்தனா வெற்றி பெற்றுள்ளார்.
– தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
– மயிலாப்பூரில் தவெக சார்பாக போட்டியிட்ட வெங்கட ரமணன் வெற்றி பெற்றுள்ளார்.
– ராயபுரம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட விஜய் தாமு வெற்றி பெற்றுள்ளார்.
– திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட ஐ.பி.செந்தில்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
– இராதாபுரம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றுள்ளார்.
– வேளச்சேரி தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட குமார் வெற்றி பெற்றுள்ளார்.
